சின்ன சின்ன அன்பில்

தட்டில் தர்பூசணி பழத்தை
வெட்டி வைத்து கொண்டு
தெரு தெருவாக சென்று
கூவி கூவி விற்கும்
பள்ளி சிறுவன் ஒருவன்!

சித்திரை வெயில் உச்சம்
அடைய வாயின் எச்சமும்
வரண்டு போக தண்ணீர்
வேண்டி கேட்கிறான் பெண்
ஒருவளிடம் அவளோ இவன்
நிலை கண்டு கலங்கி
ஒரு சொம்பு பால்
கொண்டு தருகிறாள் தாகத்தோடு
பசியையும் கொஞ்சம் ஆற்றியவன்
பணம் எவ்வளவு தரவேண்டும்
என கேட்கிறான் அவளோ
இவன் சுயமரியாதையை கண்டு
வியந்து தலை வருடி
பாசமாய் தந்ததை விலைபேசாதே
என சொல்லலி சென்றுவிடுகிறாள்!

நாட்கள் நகர்ந்தன வருடங்கள்
கழிந்தன அப்பெண் விசித்திரமான
நோயால் பாதிக்கப்பட்டால் போகாத
இடமும் இல்லை பார்க்காத
வைத்தியமும் இல்லை ஆனால்
அவள் நோய் தீர்ந்த
பாடில்லை பக்கத்து நகரத்தில்
மருத்துவர் ஒருவர் வந்து
இருப்பதாகவும் அவர் இதுபோன்ற
நோய்ககளை ஒழிப்பதில் சிறப்பு
பெயர் பெற்றவர் என்றும்
அவளுக்கு சிகிச்சை அளித்த
மருத்துவர் சொல்லி அவரிடம்
செல்லும்படி அறிவுருத்த படுகிறாள்!

அங்கு செல்கிறால் நோயை
பரிசோதித்த மருத்துவர் ஒருவர்
தங்களுக்கு நோய் முற்றிவிட்டதாகவும்
நிறைய செலவாகும் எனவும்
அப்படியே செலவழித்தாலும் நோய்
கண்டிப்பாய் தீரும் உத்திரவாதம்
இல்லை எனவும் சொல்கிறார்!

இதை கேட்டு கலங்கிய
அப்பெண் வேறு வழியில்லாமல்
பணத்தை பற்றிய கவலையுடன்
சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கிறாள்
தங்களுக்கு சிகிச்சை அளிக்க
வேண்டிய மருத்துவர் வெளிநாடு
சென்று இருப்பதாகவும் அவர்
குறிப்பிட்ட தேதியில் வருவார்
அன்றே சிகிச்சையை வைத்து
கொள்ளலாம் என சொல்லி
அனுப்பி விடுகிறார் அவளை!

நாட்கள் நகர்ந்தன அவர்
சொல்லிய நாளும் வந்தது
இவள் அந்த மருத்துவமனையில்
சேர்ந்து அறுவை சிகிச்சையும்
நடைபெறுகிறது கடவுள் புண்ணியத்தில்
நோயும் பூரணமாக குணம்
அடைந்து விடுகிறாள் இப்போது
பணம் எவ்வளவு இருக்கும்
என நினைத்து கலங்கி
கொண்டிருக்கும் வேளையில்
இவளுக்கு அறுவை சிகிச்சை
செய்த மருத்துவர் இவளை
பார்க்க வருகிறார் அவரோடு
இருந்த அறை கண்காணிப்பாளரை
அழைத்து காதில் ஏதோ
சொல்கிறார் அவரும் வெளியே
சென்று விடுகிறார் பிறகு
இவளிடம் எப்படி உள்ளீர்கள்
என கேட்கிறார் இவளோ
இருகைகளையும் கூப்பி மருத்துவரை
கும்பிட்டபடி நலாமாக உள்ளேன்
என சொல்கிறாள் சிகிச்சை
செலவு எவ்வளவு என
கேட்கிறாள் அதற்குள் வெளியே
சென்ற அறை கண்காணிப்பாளர்
பால் சொம்போடு உள்நுழைகிறார்!

அதை வாங்கிய மருத்துவர்
அப்பெண்ணிடம் கொடுத்து பருகும்
படி சொல்கிறார் அவளும்
பருகிவிட்டு மீண்டும் கேட்கிறாள்
செலவு எவ்வளவு என
நெருங்கி வந்த மருத்துவர்
அவளின் தலையை வருடி
சொல்கிறார் விலை மதிப்பில்லா
தங்கள் பாசம் என்று!

தோழர்களே இது கதையோ கற்பனையோ இல்லை புகழ்பெற்ற மருத்துவர் Dr. Howard கெல்லி அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.

யாரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் அன்பாய் இருப்போம்

நம்மால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அனைவருக்கும் கடமையென செய்வோம்!

நல்லவை அனைத்தும் மேன்மையான தமிழ் உள்ளம் படைத்த நம்மில் இருந்தே தொடக்கம் கொள்ளட்டும்,

எந்த விஷயங்களை யார் சொல்ல கேட்பினும் நமக்கே உரித்தான பகுத்தறிவை கொண்டு அவ்விஷயங்களை பகுத்து நன்மை எது,தீமை எது என அறிந்து அதில் உள்ள தீமைகளை களைந்து நன்மையை ஏற்று வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் வாழ்வோம்!!!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (31-Mar-13, 10:03 am)
Tanglish : sinna sinna anbil
பார்வை : 73

மேலே