புரியாம பேசாதீங்க

எல்லோரும்
ஒன்னா சேர்ந்து
இப்புடியா
கொக்கி போடறது?
இத்தன வருசமா
என்னத் தெரிஞ்சும்
இப்புடியா
உசுர எடுக்கறது ?
ஆடு மாடுகளோட
என்னையும் வெச்சு
இப்புடியா
தண்ணி காட்டறது ?
அடைக் கோழியாட்டம்
கெடக்கறேன்னு
இப்புடியா
எதுக்கவே வசவறது ?
எல்லா சாதி சனம்
ஒறவு ஒட்டியிருந்தும்
ஒன்னுமில்லாத
பஞ்சப் பரதேசியா
சுத்தறேன்னுதானே
ஊர்க்குள்ளார தூத்தறீங்க
எல்லா சொகமும் இருந்தும்
கஞ்சிக்கு செத்தவனாட்டம்
அலையறேன்னுதானே
வாய்ச்சட்டியில போட்டு
வறுத்தெடுக்கறீங்க
மனசு... மனசு...
உங்களுக்கு இருக்கற
என்ன மனசு
எனக்கு இல்லாம
போயிட்டுதுன்னு
இப்புடி கூவறிங்க
அட....கோபத்துல மறந்து
ஒளறிட்டேன்....
கொஞ்சமாவது
உனக்கு மனசிருக்குதா
அப்புடின்னுதானே
கேக்கறீங்க...
மனசு அப்பிடின்னு
ஒன்னு இருந்தா
எங்கள எல்லாம்
வெறுத்துட்டு
இப்புடி மதப்பமா
சுத்துவியாடான்னு தானே
கேக்கறீங்க ?
முடிஞ்சா
செஞ்சு பாருங்க நீங்க
எங்கிட்டே இருந்து
பிச்சுக்கிட்டு போன
மனச
அவகிட்டே இருந்து
திருப்ப முடியுமான்னு
அதுக்கெல்லாம் லேசுப்பட்டவ
அவ[ள்] இல்லைங்கிறது
அப்புறமா தெரியும்
உங்களுக்கு !
போங்க ! போங்க !!