[444] ஈஸ்டர் (2013) தின வாழ்த்துக்கள்...
பழையன கழிந்து புதியன புகுநாள்!
பார்வையில் மாற்றம் பழகிட வருநாள்!
எளியவர் வாழ்வில் எழுந்திட வருநாள்!
இனியவை வாழ்வின் இயல்பெனப் பெறுநாள்!
சோர்ந்தவர் உள்ளம் சுகப்பட வருநாள்!
சுற்றிலும் மகிழ்ச்சி சுமந்துடன் வருநாள்!
ஆர்வமும் தொண்டும் அதிகரித் திடுநாள்!
ஆசையின் சுயனலம் அழிந்திட வருநாள்!
மானிடர் துயர்களை வென்றிட வருநாள்!
மரணமில் வாழ்வை வழங்கிட வருநாள்!
தான்'அவர்' மரணம் தவிர்த்தெழு திருநாள்!
தாங்கிடக் கைவிரித் தவர்வரும் நன்னாள்!
++++++++ ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்++++++++