கண்களால் காண முடியாத காதலனும்.!!காதல் தோல்வியும்...!!
அன்புக்காக நட்பை தத்துஎடுத்தேன்..
நட்புக்காக காதலை தத்து எடுத்தேன்...
காதலுக்காக கண்ணீரை தத்து எடுத்தேன்...
கண்ணீரின் முடிவாக ...!
காதலை விட்டு இழந்தேன்...!
காதலனை விட்டு இளந்தென்...!
நண்பனாக நீ இருந்த பொது
பூத்த நட்சத்திரம்...
காதலாக மாறிய பின்
ஒளி மங்கி ..
உதிரத்தொடங்கியது ஏன்????
காதல் கவிதைகளில்
கேட்டறிந்த காதலின்படி ...!
காதல் பூங்காக்களில்
பார்த்து ரசித்த காதலின்படி...!!
கண்ணோடு கண்
பேசிக்கொள்ள ஆசைப்பட்டான் -காதலன்!
கண்களின் பயனை
இழந்த காதலியிடம் !!
அன்பின் முதல் நட்சத்திரம் ...
உதிரத்தொடங்கியது...!!
அவளை தனியே ..
சந்திக்க ஆசைப்பட்டான்-காதலன்!
தன் முகத்தையே
முழுதாக கண்டு ரசிக்கும்
பாக்கியம் கிடைக்காத அவள்...1
எப்போதும் பிறரை
சார்ந்தே வாழும் அவள்..
அவன் ஆசைக்கு மறுப்பு கூறினாள் ..!!
உதிர்ந்தது...
அன்பின் இரண்டாம் நட்சத்திரம்..!!
இரவு பகல் அறியாத அவளுக்கு
இரவையே பகலாக மாற்றியவள்
அவள் தாய்...!
பள்ளிமுதல் பருவம்வரை
தாயை தோழியாக எண்ணி
தன் காதலின் வருகையையும்
தாயிடம் பகிர்ந்து கொண்டாள்-காதலி.!
தன் மகளுக்கு
தனக்கு பின் வரப்போகும்
செவிலித்தாயாக காதலன்
இருப்பான் என்று ஆசைப்பட்டாள்-தாய்!
தன் காதலனின் ஆசைகளை
தன் தோழியிடம்[தாய்]
பகிர்ந்துகொண்டாள்-காதலி.!1
தாய் கூறிய ஆறுதல் பதில்
ஆசைகள் தவறில்லை
அன்பிற்கு வயதில்லை
ஆனால்...........
பருவமாற்றத்திற்குள்
தடுமாற்றங்கள் வரலாம் ..!
அதற்காக அவனை
நம்பாதே எனக் கூறவில்லை ...
உன்னை நம்பு...
உன்னை உயர்த்திக்கொள் ...
உன் இயலாமையை மாற்றிக்கொள்...
உன் கல்வி அறிவை வளர்த்துக்கொள் ..
உன் தனித்திறமையை வளர்த்துக்கொள்...
பிறரை சார்ந்து
வாழும் வாழ்கை போதும் உனக்கு ..
உன் வாழ்க்கை உன் கையில்...1
"உண்மை யான அன்பு
உனக்காக காத்திருக்கும்"
என்று கூறிச்சென்றாள்-தாய்!!
நான்கு வருடங்கள்
நாம் காதலோடு காத்திருக்கலாம் ...
நம் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளலாம் ..
என்று கூறினாள்- காதலி.!!
அவனுக்கு பணம் மீது ஆசையில்லை
அதனால் பணம் தேவை இல்லை ..
அதனால் மணம் முடித்துக்கொள்ளலாம் ...
என்று கூறினான்-காதலன்!!
அவள் மறுமுறை அவனிடம் பேசிபார்த்தாள் ...
சரி தற்போது மணம்
முடித்துக்கொண்டாலும்...
ஒரு சமயத்தில் உன் இழப்பிற்கு பின்னால்
தன்னைப்பற்றியும் பிறரைப்பற்றியும் ..
கல்விஅறிவால் மட்டுமே
அறிந்து கொள்ளும் நான்.....
இப்போது கல்வியையும் நிறுத்திவிட்டு
என்ன செய்ய முடியும்????
என்று கேட்டாள்-காதலி!!
அவன் கூறிய கடைசி பதில்...?????
அவனால் காத்திருக்க முடியாது...!!
என்பதுதான்.
உதிர்ந்து போனது அன்பின் அனைத்து நட்சத்திரங்களும்....!! '
நீ காதலை மட்டும் தான் மறந்து போனாயா???
இல்லை நம் நட்பின் அன்பையுமா????
காதலை தொடர முடியாவிட்டாலும்
நட்பை தொடரலாமா?????
அவன் வைத்தது காதலுக்கான
முற்றுப்புள்ளியா ??
இல்லை மொத்த அன்பிற்கு
வைத்த முற்றுப்புள்ளியா????
நீங்களே சொல்லுங்கள்..!!
.