உன்மேல் கொண்ட காதலுக்கு...

தீராத ஆசை உன்மேல்
தெவிட்டாத காதல் உன்மேல்
கூடாத கூடல் உன்மேல்

உருகாத ஊடல் உன்மேல்
தேயாத தேடல் உன்மேல்
தெரிந்தே தேட விட்டாய்!
உயிரை உருக விட்டாய்!

உன்மேல் கொண்ட காதலுக்கு
உன்னத பரிசுத் தந்தாய்!
என் கவிதையில் நீ...
கல்லறையில் நான்....

எழுதியவர் : ஆனந்து (1-Apr-13, 12:18 am)
பார்வை : 231

மேலே