ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினமென்று
முட்டாள் தனமாய் வந்ததோ
முட்டாளான அறிவாளிகளால்.!

முட்டாள்களாய் ஆக்குவது
அறிவாளிதனமா?
முட்டாள்தனமா?

தன்னை முட்டாள் என்று
சொல்பவன் அறிவாளி!
தன் முட்டாள்தனத்தை
அறிந்து சொல்வதால்....

தன்னை அறிவாளி என்று
சொல்பவன் முட்டாள்.!
தன் முட்டாள்தனத்தை
அறியாமல் சொல்வதால்...

பிறரை ஏமாற்றி அற்ப சுகம்
அனுபவிக்கும் அறிவுத்தனம்
அழகா?

ஏமாந்தவர் மனம்
நோகும் போது
ஏமாற்றியரின் ஏளனச் சிரிப்பு
ஏற்புடையதா?


ஏமாறுபவர்கள் முட்டாள்கள் எனில்
ஏமாறாத அறிவாளி யார் இங்கே?

முட்டாள்தனம் விடுப்போம்
முட்டாள்கள் தினம் ஒழிப்போம்.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (1-Apr-13, 7:27 am)
சேர்த்தது : அஹமது அலி
பார்வை : 581

மேலே