உனக்கான எனது பாடல்..!(ரோஷான் ஏ.ஜிப்ரி.)
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை பெற்றது
தவமென்றே நான் தரிசிக்கின்றேன்
நீ என்ன நினைத்தாயோ
நான் உன்னையே நினைக்கின்றேன்
பறவைகளின் மொழியை
உன் பேச்சிலிருந்து கேட்டிருக்கின்றேன்
வண்ணத்து பூச்சிகளின் சிறகடிப்பை
உன் இமைகளிலும்,
பூக்களின் இதழ் விரிப்பை
உன் புன்னகையில் பாத்திருக்கிறேன்
அருவியின் சல,சலப்பை
உன் சிரிப்பிலிருந்து அறிந்திருக்கிறேன்
நீ அழுதால் என்னில் வாட்டம்
நீ சிரித்தால் எனக்கு மோட்சம்
நீ வெளிச்சென்று வீடு திரும்ப
தாமதமாகும் தருணங்களில்;
உயிர் அச்சிலிருந்து விலகி
ஓடுபாதை புரியாமல்
தடம் புரளப் பாத்திருக்கின்றது
தள்ளாடும் இந்த தாய்மை!
இன்றுனக்கு சிறகு முளைத்திற்று
திசைகளை நீயே தீர்மானிக்கின்றாய்
ஆயினும்;
உனக்கேதேனுமென்றால்
உயிர் விட பாத்திருக்கும் எனக்காய்
எதை இளக்க காத்திருக்கிறாய் மகனே!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.