மீன் அங்காடி

ஈக்களால் படுதா போட்டு
குவியலாய் கடலுயிர்கள்
என்னினத்து பருவப்பெண்ணாய்
நாணமோ தெரியவில்லை .....

மீன்களின் உத்தமம்
செதில் விளக்கியே
நிரூபனம்....
இரவுப்பொழுதில்
குளிர்பெட்டி வாசம் ...
மனிதர்களுக்கும்
கிட்டாத சுகம் ....

கொசுறுக்கான நச்சரிப்புகளும்
நாசுக்கான சமாளிப்புகளும் ...
கழுவும் மீனின் நழுவும் மீனோ ??

லாபத்தொகை மனதில்
பிம்பமாய்
ஆக்ரோஷ பேரங்கள்
ஆங்காங்கே விண்ணை பிளக்க

எல்லைத்தகராருகளும்
ஏச்சும் பேச்சும்
ஏகமாய் சொற்களும்
எப்பொழுதும் தாராளம் ...
கடலிலேதான் இலங்கை ...இந்தியா..
கரையிலுமா....

கந்து வட்டி கடன் கட்டி
விஞ்சியது அரிவாள் மனை தான் போலும்
மீனாயும் பெண்களுக்கு ...

மீட்சியாய் மீன் வாசம்
இல்லை ஒரு ஆண் வாசம்
எல்லாம் பெண்கள் ...
கறாரான வியாபாரம் ...

மீன் அங்காடி

எழுதியவர் : வீ.ஆர்.கே (1-Apr-13, 7:01 pm)
பார்வை : 111

மேலே