மனம்
இழிகுணம் கொண்டு வாழும் மனம்
பிறர்க்கென வாழ்ந் துயர்ந்த மனம்
இன உணர்வற்று வாழும் மனம்
உயிரினும் மானமென பெரிதுவக்கும் மனம்
அறிவு அஞ்சாமை ஈகை ஊக்கம்
வள்ளுவன் கண்ட அரச மனம்
இவை யிழந்த தேவ மனம்
அ(ஆ)ரியன் கண்ட அற்ப மனம்
கோவில் கண்ட தமிழன் மனம்
கருவறை நுழையவிடா கடவுள் மனம்
வாக்களித்து ஏமாறும் மக்கள் மனம்
பொய்மைத் தரித்த ஆட்சியாளர் மனம்
உண்மைக்காக போராடும் பண்பட்ட மனம்
அடபோட அது ஊமை மனம்
பாரதம் பேசும் தமிழர் மனம்
தமிழுக்குக், கண்டும் காண மனம்
எந்நாடு இந்தியா தமிழன் மனம் - தமிழில்லா
தனிநாடே ஹிந்தியா ஹிந்தியன் மனம்
எம் புலவன் கண்ட தாய்மனம்
காணேன் இன்று தென்னையும் அதிசியமே
ஐடி என்ற அடிமை மனம்
'பண'நீர் மூடிய பா(ச)சி மனம்
இனம் வாழ அழியும் மனம்
தன்னுறவு வாழ இனமழிக்கும் மனம்
பல மனங்களில்லை யிங்கு இரண்டுதான்
நா உள்ள பொதுவுடைமை மனம்
நா வறுத்த சனநாயக மனம்
என்செய்ய காந்தி மனம் முன்
தோற்று நிற்கிறது கணியன் மனம்
வாழ நினையும் தமிழர் மனம்
இன்னும் தெளிவாய்
வாழவைக்க நினையும் தமிழர் மனம்
அழிப்பதே ஹிந்திய அ(ஆ)ரிய மனம்
பிச்சை யெடுத்து அலுவல் நுழைந்து
ஆட்சிப் பிடிக்கத் துணியும், ஹிந்திமனம்
உலகாண்டு சிறுநாடு புகுந் தின்று
உள்வீட்டில் உயிர்பிடிக்கும், தமிழ்மனம்
என்செய்ய அழுவத் துடிக்கும் என்மனம்
செவிமடுக்கத் துணியவில்லை நும் மனம்.