பீட்ஸா தான் சாப்பிடுவேன்

கொளுத்தும் வெயிலில்
கோட்டும் சூட்டும்
மாட்டி கொண்டு
இருட்டு கண்ணாடியும்
நாற்ற மருந்தும்
பூசிய படி
வயல் வரப்ப
சுற்றி பர்ர்க்க
போனாராம் நாட்டு
துரை ஒருவன்!

பன்னாடை கசடுகளில்
கள்ளை தேடுகிறான்!

இவன் கண்ணுக்கு
தெரியவில்லை என்பதால்
கடலை செடிகள்
காய்க்கவே இல்லையாம்!

கரும்பு செடிகள்
எப்பொழுது காய்க்கும்
பழங்களை சுவைக்க
ஆசையாய் உள்ளதாம்!

பனங்கிழங்கு,நாவற்பழங்கள்,
நெல்லி,நொங்கு
இவையெல்லாம் என்ன?

சீசி சீசி
இது எல்லாம்
எங்க அமெரிக்காவில்
இல்லவே இல்லை!

பெருமையென நினைத்து
தன்னை தானே
தரம் தாழ்த்தி
கொள்கிறான் தற்குறி!

விவசாயத்தில் வேர்வை
சிந்தி உழைத்து
கிடைத்த பணத்தில்
படித்து விட்டு!

வெளி நாட்டில்
வேலை கூலியாய்
அடிமையாக சென்ற
பஞ்ச பரதேசி
வறட்டு கவுரவத்திற்கும்
வெளி நாட்டு
மோகத்திலும் வாய்
கிழிய பேசுறான்!

கூழா?!,சீசி
நான் பிட்ஸா
தான் சாப்பிடுவேன்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (2-Apr-13, 10:28 am)
பார்வை : 94

மேலே