விடையில்லா கேள்வி இது!!
ல சிலருக்கு கைக்கு எட்டும் தூரத்தில்....
மற்றும் சிலருக்கு
கண்களுக்கெட்டும் தூரத்தில்.......
பலருக்கு கண்களுக்கெட்டா தூரத்தில்.........
அனைவருக்கும் கிட்டிவிடும் நிச்சயம்
எங்கே ?
எப்படி?
எதனால்?
எத்தனை துயரங்களை
தொட்டு விட்ட பின்னே?
அறிவாரா எவரேனும்...
♦மரணம்♦
விடையில்லா கேள்வி இது
மனிதன்
பிறந்ததும் பிறக்குது
விதி வழி வாழ்கை
விடை தேடி நடக்குது
முதுமையில் மரணத்தை
எதிர்நோக்கும் மனிதர் தம்மோடு
மனிதம் கொள்க !!
மரணம் வெல்லும் மாண்பு அது
மனிதம் என்றே உணர்க !!!