நெஞ்சில் இன்றும்....

உன் தோள் சாய்ந்து நடந்த
சாயந்திரங்கள்
உன் கைகோர்த்து நடந்த
கடற்கரை ஓரங்கள்
நாம் பதித்த பாதச் சுவடுகளில்
காதல் கவிதை எழுதிய கடலலைகள்
அந்திவானத்தின் அழகிய நிலவு
நம்மை வரவேற்ற மாலைப் பொழுதுகள்
நினைவுக் குறிப்புகளாக
கலையாத வானவில்லாக
நெஞ்சில் அன்றுபோல் இன்றும்....
~~~கல்பனா பாரதி