!!!====(((பாடல் - 2006)))====!!!

0===(((பல்லவி)))===0

வாடா கோபாலு
வாழ்க்க பேஜாரு
காதல் வருதெல்லாம் வயசு கோளாறு...
குவாட்டர் பத்தாது
மேட்டர் சிக்காது
சோடா இல்லையின்ன சுதியும் பத்தாது...

அனுபல்லவி
******************
ரெட்டைஜடை போட்டுகிட்டு சீனு காட்டுறா
ரெண்டுநாளு கழிச்சிபாத்தா ஆள மாத்துறா...
காதலுல தோல்வியின்னு தாடி வளர்க்குறான்
டாஸ்மார்க் தேடிபோயி தண்ணியடிக்கிறான்...

--------------------------------------------(வாடா கோபாலு)

0===(((சரணம்-1)))===0

அரும்புமீசை வயசுலதான் ஆச முளைக்கிது
அப்பன்ஆத்த உழைப்புதானே காற்றில் பறக்குது...
அடுத்தவேளை சோத்துகித்தான் வயிறு ஏங்குது
அடுத்தவீட்டு பொண்ண சுத்தி மனசு ஓடுது...
- - - அழகான பொண்ண பாத்தா
- - - அலையுதடா மனசு...
- - - ஆம்பளையா பொறந்துபுட்டா
- - - அதுமட்டுமா பொருப்பு...?
உழைப்பால் உயர்ந்திட கரத்தை உயர்த்திடு
கதறி அழுகிற கண்ணைத் துடைத்திடு....

-----------------------------------------(வாடா கோபாலு)

0===(((சரணம் -2)))===0

காதலொன்றே வாழ்க்கையால்ல நீயும் கேளடா
கழுதைகூட காதலிக்கிது உண்மைதானடா...
கஷ்டப்பட்டு வாழ்க்கையைத்தான் வென்று பாரடா
கடமைகளை மறந்துடாம காதல் செய்யடா...
- - - நாடே உனக்காக
- - - காத்துதானே கிடக்கு...
- - - நாளைய சரித்திரத்தை
- - - இடதுகையால் கிறுக்கு...
மலைகளைபோல நீ நிமிர்ந்து எழுந்திடு
மதங்களைசரித்து நீ மனிதத்தை விதைத்திடு...

--------------------------------------(வாடா கோபாலு)

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (3-Apr-13, 6:30 pm)
பார்வை : 114

மேலே