(ஏ)மாற்றம்
கடிதாசி கண்டு
காலம் பலவாச்சு !
வாழ்த்து அட்டை பாத்து
வருசம் செலவாச்சு !
கடிதாசி போடும் காலம்
அழிந்தாச்சு !
எஸ் எம் எஸ் ஈமெயில் அனுப்பும் காலம்
வளந்தாச்சு!
பழச நெனச்சா மனசு கனக்கும்!
மாற்றம் மட்டுமே மாறாதது
இது தெரியும் உனக்கும் !
*********************************************