எளிமை
நீ ருண்டு வாழக் கற்றேன்
ஈரக்காத் துண்டு உயிர்பேணக் கற்றேன்
உயிர்வளர்க்க ஆயிரம் வழிகள் கற்றேன்
இவைதனை கற்றுத்தந்தது பட்டினி யன்றோ
கிழிக்கந்தல் மறைத்து உடுத்தக் கற்றேன்
உடல் தெரிந்தபோதும் மானம் கற்றேன்
உடைதனில் உலகளாவிய எளிமைக் கற்றேன்
இவைதனை கற்றுத்தந்தது ஏழ்மை யன்றோ
விதி நினைந்து வருந்த வில்லை
எம்மிடம் பிடுங்க வேறேது மில்லை
வாக்கு கேட்டு எவனும் வந்ததில்லை
மனுகொண்டு நான் சென்றது மில்லை
உயிர்வாழத் தேவை நம்பிக்கை யன்றோ
எமக்கதை யளித்த இயற்கைக்கு நன்றியன்றோ...