..................ஆமை...............

ஆமையாய் நகர்கிறேன் என்றாய் !
உன்மீதான ஆசைகள் தகித்து,
உள்ளுக்குள்ளே ஓராயிரம் கனவுகள்,
கைகள் கால்கள் கழுத்தையெல்லாம்,
திமிரமுடியாமல் கட்டிவைத்தபிறகு !
உன் பின்னே ஓடவா முடியும் ?
எவ்வளவுக்கெவ்வளவு இயலுமோ?
அவ்வளவுக்கவ்வளவு தாமதித்தே,
ரசித்து ருசித்து தொடர்வேன் உன்னை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (3-Apr-13, 8:23 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 126

மேலே