எசப் பாட்டல்ல -இணைப் பாட்டு -பொள்ளாச்சி அபி

-பல்லவி-
-------------
வாடா கோபாலு
வாழ்க்க பேஜாரு..
காதல் வருவதெல்லாமே வயசுக் கோளாறு..!

காலம் காலமா..
இருப்பது தாண்டா..,
காதல் மட்டும் இல்லையானா உலகம் இல்லேடா..!
---------------- வாடா கோபாலு

-அனுபல்லவி-

ரெட்டைஜடை போட்டுகிட்டு மயிலு போகுறா..
கன்னங்குழிய சிரிச்சுகிட்டு ஒயிலு காட்டுறா..
காதலிக்கும் ஆசையிலே நானும் ஏங்குறேன்
கைகூட வேணுமின்னு நானும் வேண்டுறேன்..
-------வாடா கோபாலு—

-------சரணம்.------

அரும்புமீசை வயசுலேதான் ஆசை முளைக்குது
அப்பனாத்தா உழைப்பையெண்ணி மனசுதுடிக்குது
அடுத்தவேளை சோத்துக்கொரு வேலை தேடணும்
அப்புறமா போயிநானு பொண்ணு கேட்கணும்..!

---அழகான பொண்ணப் பாத்தா
---ஏங்கணுமா மனசு..!
---ஆம்பளையா பொறந்துபுட்டா
---நிமிரணுன்டா சிரசு..!
உழைப்பாலே உயர்ந்தாலே ஆம்பளைக்கு அழகு
இதுதாண்டா வேதமுன்னு இனியேனும் பழகு..!
--வாடா கோபாலு—


--------சரணம்.2-------

வாழ்க்கையிலே காதல்வரும் நீயும் கேளடா..
காதல்மட்டும் வாழ்க்கையில்லே புரிந்து கொள்ளடா..
இஷ்டப்படும் காதலிலே கஷ்டம் எதுக்குடா..
இருக்கும்தகுதி உசத்திகிட்டா நஷ்டமில்லேடா..

----சுயநலமே பொதுநலமாய்
----மாறும் பாரடா..
----ஆதலினால் நீயுமிங்கு
----காதல் செய்யடா..
மனசெல்லாம் உயரவேணும் மலைகளைப் போல
மதமெல்லாம் தாளவேணும் மடுக்களைப் போல
----வாடா கோபாலு----

---இது எசப் பாட்டு இல்லை.தோழர் நிலா சூரியன் எழுதிய பாடல்-2006. எனும் பாட்டின் நிழல்.
தோழர் நிலாவிற்கு நன்றி.! அன்புடன் பொள்ளாச்சி அபி !

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (3-Apr-13, 8:38 pm)
பார்வை : 131

மேலே