மழலைப் பருவம்

அடுத்தவர்கள் வியந்து நோக்க
சாலையை கடக்க
நத்தைக்கு உதவியது உண்டு.
சிறுவர்கள் நெம்பி எடுத்த
மண் புழுவிற்கு
மீண்டும் மண்ணில் துளை போட்டு
மாற்று இல்லம் கொடுத்துண்டு.
தொடர் மழையில்
ஆதரவு தேடி வரும் பூனை
முன் வாசல் கதவிடுக்கில்
பதுங்கிச் சுருண்டிருக்க
கதவைத் திறக்காமல்
ஒரு நாள் முழுக்க
வீட்டினுள்ளேயே இருந்ததுண்டு.
இப்படியாக இருந்த
என்னுள்ளிலும் இருந்தது
தும்பியின் வாலில் நூலைக் கட்டி
அதனுடனேயே பறந்த
ஒரு மழலைப் பருவம