இன்று முதல் என் மனைவி!
அழகைக் கண்டால்
ஆவெனப் பார்ப்பேன்!
சுகமான காற்றுக்கு
மயங்கி கிடப்பேன்!
இதமான சாரலில்
இதயம் இழப்பேன்!
பூக்களின் நகைப்புக்கு
நட்பைக் கொடுப்பேன்!
அவளைக் கண்டால் மட்டும்
அதிர்ச்சி அடைவேன்!
அவள் பார்வை
எனைக் கொல்லும்!
அவள் பேச்சு
கதிர்வீச்சு!
அவள் சென்றால்
தலை நிமிர்வேன்!
அவள் வந்தால்
தலை குனிவேன்!
யாரவள்?
நேற்றுவரை என் காதலி!
இன்றுமுதல் என் மனைவி!