நான் தான் கடவுள்!
நான் தான் கடவுள்!
நான் மனிதனல்ல!
ஏன்?
எப்படி நான் கடவுளாக முடியும்!
கடவுள் என்றால்
படைக்க வேண்டும்
காக்க வேண்டும்
அழிக்க வேண்டும்
நான் படைத்தது
சண்டை;
சாதிவெறி;
செருக்கு;
கர்வம்;
மற்றும் பல தேவையில்லாதவை
நான் காத்தது
விரோதம்;
குரோதம்;
ஊழல்;
தீண்டாமை;
லஞ்சம்;
மற்றும் பல தேவையில்லாதவை
நான் அழித்தது
உண்மை;
அன்பு;
அமைதி;
சமாதானம்;
இனிமை;
மற்றும் பல தேவையானவை
என்ன புரிந்ததா!?
நான் தானே கடவுள்!
இது மனிதனின் கொக்கரிப்பு!