பயம்!

மழலையாய் பிறக்கும் போது
எவருக்கும் பயமில்லை!

தன் குழந்தைக்கு சோறூட்டும்போது
ஒவ்வொருவரும்
பயத்தை காட்டி காட்டி
பயத்தையும் ஊட்டி வளர்க்கிறார்கள்!

பயமும்
கால்மேல் கால்போட்டு
மனதிற்குள்
அமர்ந்து கொள்கிறது!

பின்
படிக்கும் போது பயம்!
வளர வளர பயமும் வளர்கிறது!

காதலிக்க பயம்!
வாழ்வில் ஒருவரை
கைபிடிக்கும் போது பயம்!

பின்
பிள்ளைவர பயம்!
அவரை கரையேற்ற பயம்!
பின்
வாழ்வை முடிக்கும் போதும் பயம்!

ஆக வாழ்வே பயம்!
இல்லை வாழவே பயம்!

வாழ்க்கை பயணம் முழுதும்
பயமும் கூடவே பயணிக்கிறது!
தேவையை விட கூடவே பயணிக்கிறது!

இது தேவையா என யோசி!

பயத்தை கொன்றுவிடு!
ஜகத்தை வென்றுவிடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Apr-13, 6:34 pm)
பார்வை : 132

மேலே