நீதி இல்லை
ஆட்சிகள் நடக்குது
சாட்சிகள் கலையுது
நீதியில் இருந்த நம்பிக்கை குறையுது !
இருப்பவனுக்கு ஒன்றும்
ஏழைக்கு ஒன்றும்
நீதியில் இருக்கு பாரபட்சம் !
நீதியில்லை நேர்மையில்லை
அநீதி நிறைந்த உலகத்திலே
வாதங்கள் நிறைந்த வழக்குகள் உண்டு
வாதிக்க வக்கீல் இருவர் உண்டு !
சட்டம் படித்தவன் குற்றங்கள் செய்து
சல்லடை போட்டு வெளியில் சுற்ற
பணபலம் பக்கமே நீதியும் சாயுது
பார்த்து பார்த்து ஏழைகள் ஏங்குது !
உண்மையை விழுங்கும் வன்முறை போக்கு
நீதியை பார்க்க காலம் கடத்துது
தவறு செய்தவன் சுகமாய் வாழ்ந்து
மாண்டு போனபின் தீர்ப்பே வருது !
குண்டூசி எடுத்தவன் குற்றவாளிக் கூண்டில்
கோடியாய் திருடியவன் நிம்மதியாய் வெளியில்
நூறு ருபாய் பில்லுக்கு மின்சாரம் நிறுத்த
கூறுபட்டு கிடக்குது ஏழையின் பொழப்பு
லட்சங்கள் தாண்டியும் லைட்டுகள் ஏறிய
நல்ல போகுது பணக்கார பொழப்பு !
அதிகாரம் படைத்தவன் சதிகள் செய்ய
அரசியல் சட்டம் வழிவகை செய்யுது
அதிகாரி வர்க்கமும் துணையாய் போக
அநீதி மட்டுமே அரசாங்கம் ஆளுது !
செருப்பில்லாமல் நடக்கும் மனிதர்களுக்கிடையில்
ஏசி காரில் ரோட்டில் சுத்துறான்
சைக்கிளில் போனவன் தெருவில் நிற்க
விமானம் ஏறி வாக்கிங் போகிறான் !
இருட்டில் மாட்டி ஏழைகள் ஏங்குது
கொசுக்கடியில் கிடந்தது காலும் வீங்குது
அரசியல்வாதி வீடு நாயும்
அழகாய் தூங்குது a / c ரூமில் !
காசும் பணமும் பெரிதாய் போக
மக்களின் உயிரோ மலிவாய் ஆனது
உண்மையை சொன்னால் உயிரையும் போகுது
கொலைகார கூட்டமே நாட்டில் வாழுது !