நாகரீக மோகம்...

நண்பர்களுடன் நகரத்து வீதியிலே
நடை பயில போனேன்...
நறும் பூ மணத்தில்
நானும் வாடி நின்றேன்....!!

காதிலே கடுக்கண்
கையிலோ காப்பு...
கழுத்திலோ சங்கிலி
கூந்தலோ இரண்டடி...

பின்னழகு எனை வாட்ட
முன்னழகை பார்த்து நின்றேன்..
ஐயோ சொக்கிப் போனேன்....
அது அவள் இல்லை
அவன் என கண்டபிறகு...!!

எங்கோ பழகிய முகம்
என்றோ கேட்ட மொழி...
ஐந்தடி உயரம்...
அழகிய தோற்றம்....
சாக்குத் துணியில் ஒரு
முக்கால்....!!
காற்று பிடிக்க
கை இல்லா ரீ சேட்..!!

தலை கிப்பி... பாவம்
தலை மயிரோ சிவப்பு...
கைகளை பிடித்திடும் போது தான்
உணர்ந்தேன்... அவன் நண்பன் அல்ல
நண்பி என்று.....!!

கலாச்சாரத்திடம் கல்லெறி
வாங்கிய எனக்கு ஒன்று மட்டும்
ஆறுதல் தந்தது....!!
திருவிழா தேரில்
தெருவில்
திரு உலா போன அம்மனாவது
பச்சை பட்டுடுத்தி
போனதை பார்த்து....!!

எழுதியவர் : -தமிழ்நிலா- (7-Apr-13, 10:11 pm)
பார்வை : 160

மேலே