தோழியே.....

தோழியே.....

நதி சேரும் கடலின் மேலே
உருவாகும் துளியைப் போலே
உலகாளும் அன்புக்குள்ளே
நட்பாய் நாம் உருவானோம்...

விதி வந்து சேர்ந்ததோ
மலர் கொய்து சென்றதோ
என் நட்பை நீ வெறுத்ததனால்
தணல் மேல் விழுந்த புழுவானேன்

நட்பே வாசம் செய்ய நினைக்க,
மோசம் வந்து சேர்ந்ததோ - இதை
காலம் செய்த கோலம் என்பதா?
கடவுள் செய்த ஈனம் என்பதா?

மழை வந்து காய்ந்து போனது,
புயல் வந்து ஓய்ந்து போனது,
கடல் வந்து வற்றிப் போனது,
விழிகள் கசிகிற நீர் வற்றவில்லை...

கண்கள் காய்ந்து போனாலும்
உதிரம் வடியும் உனக்காக..

"நண்பனை தவறாய் புரிந்தேன்,
நட்பினை இழந்தேன்...
என் சுயநலத்திற்காய் அவன்
நட்பினை எரித்தேன்.. "என்று

நீ எண்ணாதே...
ஒரு நாளும் வெம்பாதே..
நட்பினை உணரதெரியாத நீ..
நடிப்பதாய் நினைத்திடுவர்கள்..

இதயத்தில் இடி தந்து விடை தந்தாய்..
தாங்கவில்லை தாளவில்லை
இதயம் அழுகிறதே எனக்காக..
செய்யாத குற்றத்துக்கு
தண்டனையா என்று....

எழுதியவர் : -தமிழ்நிலா- (7-Apr-13, 10:14 pm)
பார்வை : 351

மேலே