இஃது தான் காதலோ!
என் னிருவிழி வாசல் நீர்தெளிக்க
உன் னிருகருவிழி புள்ளி வைக்க
உருவான கோலம் பெயர் காதலோ!
என் னிருவிழி யசைந்து தாளம் போட
உன் னிருவிழி யசைந்து நாட்டியமாட
பருவம் வைத்த பெயர் காதலோ!
என் னிருவிழி பருவ பசியுடன் நோக்க
உன் னிருவிழி பசிபோக்கி மகி ழுமிந்த
தானத்தின் பெயர் தான் காதலோ!
என் னிருவிழி தினமொரு குறள் வழங்க
உன் னிருவிழி தினமும் அதை வாசிக்க
மனதில் பதிந்தபொருள் தான் காதலோ!
என் னிருவிழி தினமொரு மெட்டிசைக்க
உன் னிருவிழி அதற்கு பாடல் எழுத
காலம் பாடும் பாடல் தான் காதலோ!
என் னிருவிழி உயிரெழுத்தாக நிற்க
உன் னிருவிழி மெய்யெழுத்தாக இணைய
உயிர்,மெய் யிணைப்பு தான் காதலோ!
என் னிருவிழி மொழி கற்கும் குழந்தையாக
உன் னிருவிழி கற்று தரும் தாயக
கற்கும் மொழியின் பெயர் தான் காதலோ!
என் னிருவிழி எறும்பாக மொய்க்க
உன் னிருவிழி கரும்பாக இனிக்க
பெறும் இன்பம் தான் காதலோ!
நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்