நட்சத்திரக்கவிதைகள் -07

நட்சத்திரக்கவிதைகள் -07

நட்சத்திரக் கவிதைள் ஏழாம் பாகத்தில் சந்திப்பதில் ஆனந்தம் ! எம்முடைய தெரிவுகள் சரியாக இருகின்றதா என்ற விமர்சனங்களை எதிர்ப் பார்க்கிறோம். இது நல்ல படைப்புக்களில் விலாசங்களைத் தரும் ஒரு பணி. அதனால் உங்களுடன் ஒரு சுமூக உறவினை, ஒத்தாசையினை தொடர்ந்தம் எதிர்பார்க்கிறோம். எமது படைப்புக்கள் யாவிலும் இடம் பிடிக்கும் படைப்புக்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். அப்படி விலாசமிடும் படைப்புக்களில் கருத்துக்களை எழுதி, புள்ளிகள் வழங்கி அந்த படைப்க்களை ஊக்குவிக்கவேண்டிய கடமையினை உணர்வீர்களாக !
==============================================

இறைவன் இருக்கானா?? - குமார் பாலகிருஷ்ணன்

எல்லோரினுடைய பாராட்டினையும் பெறுவதற்கு மிகவும் தகுதியானதொரு படைப்பு. ஏழை வாழ்க்கையின் அவலம் மிகவும் வித்தியாசமானதொரு கோணத்தில் சொல்லப்பட்டிருப்பது கவிதையின் கூடுதல் சிறப்பு. ஏழ்மையும் கவிதை எழுதியவரின் புலமையும் இங்கே ஒரே நேரத்தில் வெளிப்பட்டு நிற்கிறது. படைப்பின் தலைப்பு “கடவுள் இருக்கின்றானா” என்று மாற்றப் பட வேண்டும்.
Added by :Kumar balakrishnan - கவிதை எண் - 115402
===============================================

நாகரீக மோகம்... -தமிழ்நிலா

நாகரிக குளறுபடிகளை குறும்புத் தனமாய்ச் சொல்லுகிறது இவரின் வரிகள். காலம் செய்த கோலம் என்று நாம் சொல்லுவதை நகைசுவைக் கலந்த ஆதங்கமாய் சொல்லும் இந்த வரிகள் மிக அருமையானது. கவிதையின் முடிவு நாளைக்கு என்னாகுமோ ? கடவுளையும் நாளை நாகரிக மோகம் தாக்குமோ? என்ற ஐயப்பாட்டினை எழுப்பிச் செல்கிறதே....அருமையான படைப்பு !
Added by :thamilnila - கவிதை எண் – 115888
---------------------
தேவதை தரிசனங்கள் - அனுசரன்

சில காதல் கவிதைகள் படிக்கிற போது தான் காதல் அழகானது என்று உணர முடிகிறது. சில காதல் கவிதைகளைப் படித்தால், காதலே ரொம்ப அசிங்கமான சமாச்சாரம் போல இருக்கேன்னு தோன்றும். அனுசரனின் இந்த வரிகள் முதலாம் ரகம். உணர்வுள்ள வரிகள். சொற்பிரயோகங்களும் அழகாய் இருக்கிறது ! நல்ல படைப்பு !
Added by :Anusaran - கவிதை எண் - 115593

------------------
நீதி இல்லை - வினாயகமுருகன்

இன்று நாட்டில், உலகில் நடக்கும் அநியாயங்களை நியாயமாக ஒப்பீடு செய்து ஆதங்கப் படுகிறார் இந்த தோழர். கசப்பான உண்மைகளின் கச்சேரியாய் இருக்கிறது கவிதை. சில சொற்களை மாற்றியமைக்கக் வேண்டும் படைப்பில். படைப்பு நன்று!
Added by :VINAYAGAMURUGAN - கவிதை எண் – 115872
-----------------
வர்ணஜாலம் - கணேஷ்குமார் பாலு

வர்ணங்களால் வாழ்க்கைக்குச் செய்தியொன்றைச்சொல்கிறது இந்த வர்ணஜாலம். என்னதான் வாழ்க்கைக்கு செயற்கையாய் வர்ணம் பூசி மெருகேற்ற நினைத்தாலும் இயற்கையான இன்பத்தை பெற்றுவிட முடிவதில்லை. மன அழுத்தங்களே மீதமாகும் என அழுத்தமாக சொல்கிறது. வித்தியாசமான படைப்பு !
Added by: Ganeshkumar Balu - கவிதை எண் -115844

எழுதியவர் : (8-Apr-13, 8:48 am)
பார்வை : 162

மேலே