வட இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜெயந்தி நடராஜன்..! ஏன் இந்த திடீர் ஒப்பாரி...?
வட இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜெயந்தி நடராஜன்..! ஏன் இந்த திடீர் ஒப்பாரி...?
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு FICCI என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் சார்பாக, இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு ஏப்ரல் 8 - ம் தேதி முதல் 12 - ம் தேதி வரை பயணம் செய்து, அந்த நாட்டு தலைவர்களுடன் அரசியல், வர்த்தகம், தொழில் உறவுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
முதலில் ரகசியமாகத் தான் வைத்திருந்தார்கள் இந்த திட்டத்தை...
ஆனாலும் கசிந்து விட்டது. வர்த்தகம் சரி..தொழில் உறவுகள் சரி...ஒரு வர்த்தக அமைப்பு இவ்வாறு தான் செயல்படும்..அதுஎன்ன அரசியல்...?
அதாவது இவ்வாறு சொன்னார்கள்...இலங்கையில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை போய் பார்ப்பார்களாம்...ஆலோசனை நடத்துவார்களாம்...
எவ்வளவு நாளைக்குத் தான் இந்த மாதிரியே சொல்லி ஏமாற்றுவார்கள்..? முதல் எம்.பி.க்கள் குழு சென்ற பொழுதும் இதைத்தானே அய்யா சொன்னீர்கள்...இன்னும் ஒரு நூற்று ஐம்பது வருடங்கள் இலங்கைக்கு போனாலும் அங்கே இந்திய அரசு வீடு கட்டிக் கொண்டிருக்கிறது அதைப் போய் இந்திய எம்.பி.க்கள் குழு பார்வையிடும் என்று சொல்வார்களோ..?
தமிழக காங்கிரஸ் பெருச்சாளிகள் மெல்ல மெல்ல ஈழத் தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள்.தமிழக மீனவனை பற்றி பேசுகிறார்கள்...என்ன பேசினாலும் ஓட்டு கேட்க மீனவ கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்...போராடிய மாணவர்களை உருட்டுக் கட்டையால் அடித்த இடத்திற்கு செல்ல வேண்டும், போராட்டம் நடத்திய மாணவர்களின் வீடுகளுக்கு ஓட்டு கேட்டு செல்ல வேண்டும்..
இவ்வாறாக இந்த தேர்தல் என்ற இந்த பாரிய தொந்தரவு...ஏழரை நாட்டு சனியன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை என்று பேசுபவனையே குவண்டாமோ சிறைக்கு அனுப்பி அங்கு நையப்புடைக்க மாட்டார்களா என்ன இந்த காங்கிரஸ் பெருச்சாளிகள்...?
சங்கிலிக்கருப்பு