காதல் மனைவிக்கு

சித்திரமே............,என்
சிந்தனையில் ஓயாது
அலை அடிக்கும்
சமுத்திரமே........,என்
நித்திரை கனவுலகை
அலங்கரிக்கும் பொக்கிஷமே!

மேடும், பள்ளமும்
நிறைந்த வாழ்வில்
நடப்பது எப்படியோ?
அதை கடப்பதெப்படியோ?
என அச்சமுற்று
மலைத்து நின்றேனடி!

கடவுள் என்மேல்
கருணை கொண்டு
கொடுத்த கொடையே,
என் தேவதையே
நீ என்
கரம் பற்றி
பறக்க செய்தாயடி!

வென்ற வேளைகளில்
ஆரத்தி எடுத்து
என் திருஷ்டியை
கழித்த நீ,
தோற்ற வேலைகளிலும்
ஆதரவாக நிற்க
மறப்பதில்லையடி!

தேகங்கள் இரண்டு
என்ற போதிலும்
காயங்கள் உனை
தீண்டினால் கண்ணீர்
எனக்கு பெருகுதடி!

என் உயிரே,
எனது உள்ளமே,
எனை வாழச்செய்யும்
சுவாச காற்றே !

உண்டென்றால் ஓயாது
கண்ணிமைக்காது உனை
பார்க்கும் நான்,
இல்லையென்றாலும் என்
நினைவால் உனை
வாரி அனைத்து
கொள்கிறேனடி!

இது காதலா?,
இல்லை பக்தியா?,
தெரியவில்லையடி எனக்கு!
ஆயினும் என்
முக்தி நிலை
மட்டும் உன்னில்,
உன்னில் மட்டுமே,
என்பதை நன்கு
அறிவேனடி நான்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (8-Apr-13, 6:46 pm)
பார்வை : 4644

மேலே