ஆகையால் சொல்கிறேன் ....
உனக்காய்
நான் வருந்துவேன் - எனக்காய்
நீ அழுவாய் .
எனக்காய்
நீ துடிப்பாய் - உனக்காய்
நான் பதறுவேன் .
உன்னை நான் நினைப்பேன்
என்னை நீ நினைப்பாய்
கொஞ்ச நேரத்தில்
உன்னை பற்றிய
நினைவு
என்
மேனியை மெல்ல வருடும்
உடலுக்கு புத்துணர்வு அளிக்கும்
கைகளை ரோஜாவால் நிரப்பும்
கால்களை பறக்க செய்யும் ....
இவையெல்லாம் நடக்க
நான்
முதலில் கனா காண வேண்டும்
அதற்கு நான் உறங்க வேண்டும் !
ஆகையால் சொல்கிறேன் ......
இரவு வணக்கம் .