நான் கண்ட கண்ணா, வரம் தர வா

மதத்திற்குள் பூட்டபடாத பூரண மனிதனை
பற்றிய வரிகளாகவே காண்க !!!!!!!
ஜாதிக்குள்ளும் அடைத்துவைத்து அலங்கோல
படுத்திய மனிதர்களுக்கு அப்பாற்பட்ட அறிஞன்,
கலைஞன், காதலன் ,சத்ரியன் என்ற பண்முக மனிதகடவுளாக நினைத்து எழுதினேன் !!!!!
***********************************************************************
நெடிய வரலாற்றில் இளமையை கண்டேன்
=====விடியல் வணங்கிடும் விசித்திரம் கண்டேன்

பிரபஞ்சத்தை மனிதஉடம்பினில் கண்டேன்
====தாயன்பில் கட்டுண்ட பிரபஞ்சத்தை கண்டேன்

முத்தத்துகேங்கும் மூங்கிலை கண்டேன்
====குழலிசைக்கு மயங்கிய முகிலையும் கண்டேன்

தியானத்தில் விழாத யோகியை கண்டேன்
=====மழைவான வண்ணமேனியன் கண்டேன்

எங்குநோக்கினும் மோகத்தை கண்டேன்
====யோகத்தின் சாயல் அதனுள் கண்டேன்

ஆ நிரை மேய்த்த சத்திரியனை கண்டேன்
====ஆசையோடு இயங்கிய புத்தனை கண்டேன்

பாஞ்சசன்ய ஓசையை கேட்டேன்
=====அதர்மம் அவனடி பணிந்திட கண்டேன்

போருக்கு மத்தியில் போதனை கண்டேன்
=====போதி மரத்தை போரினில் கண்டேன்

நட்போடு நடந்திடும் மாமன்னன் கண்டேன்
====காமத்தை அணைத்திட்ட ஞானியை கண்டேன்

வாழ்வினில் நடித்த நடிகனை கண்டேன்
=====மரணத்தை ஏற்ற கடவுளை கண்டேன்

மொத்தத்தில் பூரண மனிதனை கண்டேன்
====கண்ணன் என்ற வடிவினில் கண்டேன்

ஹரி ஹரி கோவிந்தா
புன்னகைபுரிந்திடும் முகத்தினை தா!!!

ஹரி ஹரி கோவிந்தா
வாழ்வினை ரசித்திடும் வரத்தினை தா !!!

ஹரி ஹரி கோவிந்தா
நானாக வாழ்ந்திடும் வரத்தினை தா!!!

ஹரி ஹரி கோவிந்தா
கர்மயோகியாகும் பலத்தினை தா!!!

முகுந்தா நரசிம்மா கோகுல பாலா
வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா
நின் அருள் மழையில் நனைந்திடும் அகத்திணை தா !!!!!!!!!!!

**********************************************************
இப்படிக்கு கண்ணன்
என்னும் சம்பூரணமனிதனின்
தொண்டன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வலி ) (8-Apr-13, 8:54 pm)
பார்வை : 151

மேலே