உழவன்

மனித பிறவி மகத்தான ஒன்று
மண்ணில் பிறந்த மனிதர்களிடத்தில்
உழைத்து உழைத்து மடிந்து போகும்
ஓர் குலம் என்றால் உழவர் குலம் !

நிலத்தில் உழைத்து உடலும் கருத்து ,
வயிற்றில் தெரியுது வறுமைக்கோடு
மீதிஎன்பது இங்கு இல்லை
அழுது சாகுது உழவர் இனம் !

வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி
அல்லும் பகலும் ஓயாமல் உழைத்து
அறுவடை செய்து அளந்து பார்த்தா
கூலிக்கு கூட லாபம் காணல !

விலைவாசி ஏறி உச்சிக்கு போக
உழவன் நிலைமை தலைகீழாய் போச்சு
வரவு செலவு கணக்கு பார்த்தால்
வயித்துக்கூட கஞ்சி மிஞ்சல !

வருடம் முழுதும் உழைத்து பார்க்கிறான்
வாங்கிய கடனை அடைக்க நினைக்கிறான்
எலியும் எறும்பும் சேமித்ததை கூட
இவனால் இங்கு சேமிக்க முடியல !

பருவ மழையும் பொய்த்து போச்சு
ஆறும் எறியும் வற்றிபோச்சு
வெடித்து கிடக்கும் நிலங்களை பார்த்து
வெறுத்து சாகுது உழவர் கூட்டம் !

ஊருக்கு உழைத்து கொடுத்தவன் கையில்
ஒன்றும் மிஞ்சல உழவுத்தொழிலில்
வாக்கு கொடுத்து வாங்கி கடனுக்கு
வட்டியை கூட செலுத்த முடியல !

ஊர் பசியை தீர்த்த உழவர் குலத்துக்கு
உணவுக்கு கூட வழியில்லை
எலி கறி தின்று பசியை போக்கும் ,
கொடுமை கண்டு என்ன சொல்ல !








ஏற்றம் எனபது இங்கு இல்லை

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Apr-13, 1:37 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : uzhavan
பார்வை : 121

மேலே