ஆசை வாழ்வை பறித்தது ,
அன்று மனிதன் வாழ்வை துறந்து, தனியாக முனிவனாக பல ஆண்டுகள் தவம் புரிந்தான் காடுகளில் பேராசையில்........,
இன்று மனிதன் வாழ்வை இழந்து, பணியாளனாக பல ஆண்டுகள் தவம் புரிகிறான் வெளிநாடுகளில் பண ஆசையில்.......,
மனிதா!
தான் வாழ ஒரு உயிரை அழித்து தின்னும் மிருகத்தை போல,
நீ உயிர் வாழ ,உன் வாழ்வோடு ,அவளின் வாழ்வையும் அழித்து பணத்தை தேடி வெளிநாடு போகும் நீயும் ஒரு மிருகம் தானே!