சுகிப்பாயா காதலா!!!
சுகிப்பாயா காதலா!!!
காதலன்:
மொட்டு விரிய
மலரென்று பெயரகும்
கண்மணியே!
முகமென்ற மொட்டை
மலராக்கும் சிரிப்பை சிந்த
சிந்தனை செய்வதேன் என் அன்பே!
காதலி:-
சிட்டு யென் சிரிப்பை
சில்லரையாக கொட்டிட
முகம் சுருங்குமே!
கண்ணா!!!
சுருங்கிய என் முகத்தை
சுகிப்பாயா!
காதலன்:-
கணுக்கள் பல யிருந்தும்
தேனின் சுவை தரும் கரும்பு
சிரிப்பில் சுருங்கும் முகம் கூட
கரும்பாக இனிக்குமடி!
நன்றி
வாழ்க வளமுடன்
சிவகுமார்