காதல் பிச்சை -தனஞ்சன்

நீரின்றி பாலில்லை
நீயின்றி நானில்லை என்று
சொன்னவன் நான்தான்

நான் சுமந்த கனவுகளின்
மொத்த வடிவம் நீ என்று
சொன்னவன் நான்தான்

சாதியென்ன மதமென்ன
காதலுக்கு இது பொருட்ட ?
என கேட்டவன் நான்தான்

அந்த வானில் அளவளாவும்
நிலவுபோல் ஒரு
மாளிகை கட்டி அதில்
உன்னை ராணியாக
முடிசூட்ட
எத்தனித்தவன் நான்தான்

கருனைமகள் கண்ணழகி
திருமகளின் வடிவழகி
நடைபயிலும் பாதங்கள்
தமிழ் சொன்ன கொடியழகி
என உன்னை
வர்ணித்தவன் நான்தான்

உன் கன்னக் கதுப்புகளில்
நித்தமொரு முத்தமிட்டு
செத்துப்போக வேண்டும் என்று
சொன்னவன் நான்தான்

என்றாலும் சொல்கிறேன்

நீ என்னைவிட்டு போய்விடு

உன்னை என்
கருவிழிகளுக்குள் வைத்து
கருத்தரிக்க நினைத்தவன் நான்தான்

எந்தன் சரிவுகளில்
உந்தன் மடியில் படுத்து என்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
நினைத்தவன் நான்தான்

உன்னை இதமாய் அனைத்து
சுவர்க்க போகங்களை தோற்கடிக்க
நினைத்தவன் நான்தான்

உன் மெல்லிய நளினங்களில்
பெரும் கவிதை பாட
நினைத்தவன் நான்தான்

நான் கிள்ளிய கனவுகளில்
உலகை வென்று
உன் பாதங்களில்
காலணியாய் மாட்ட
நினைத்தவன் நான்தான்

என்றாலும் சொல்கிறேன்

நீ என்னைவிட்டு போய்விடு

ஏன் என்றால்
நான் இன்னும்
உன்னை காதலிக்கிறேன்

நான் கொஞ்சம்
பேசத்தெரிந்த வாலிபன்
நீ போய்விடு

நான் வலி
சுமக்கத்தெரிந்த கழுதை
நீ போய்விடு

நான் சிந்திக்கத்தெரிந்த ஜீவன்
நீ போய்விடு

நான் வலியிலும்
சிரிக்கத்தெரிந்த நடிகன்
நீ போய்விடு

நான் விடியலை தேடும்
கரும் பறவை
திசைகளை எங்கோ
தொலைத்துவிட்டேன்
நீயும் போய்விடு

எனக்கென்று இன்று ஒன்றுமில்லை
எனக்கென்று வந்தவளும்
இன்றுமுதல் எனது இல்லை
நீயும் போய்விடு

காதலை மட்டும் சிதைக்காதே
அப்படியே போய்விடு

காதல் என்ற குருவிக்கு
சிறகருத்த தேசமிது ஆதலால்

சத்தியமாய் சொல்கிறேன்
நீ மட்டும் போய்விடு
காதலை என்னிடம்
விட்டுவிடு

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (10-Apr-13, 10:16 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 186

மேலே