பிச்சைக்காரர்கள்

கிழிந்த உடையும் ,
கறுத்த உடலும் ,
நீட்டிய கைகளும் ,
இவர்களின் அடையாளம் !

வீதியே வீடு ,
மண்தரையே பஞ்சுமெத்தை ,
கந்தலே உடை ,
குப்பை மேடுகளே இவர்களின் உணவு கூடம் !

ஒட்டிய வயிறும் ,
பரட்டை தலையும் ,
பிச்சை கோப்பையும் ,
ஒற்றை தடியும் இவர்களின் உடமைகள்!

கொட்டும் மழையும் ,
கொளுத்தும் வெய்யிலும் ,
உரை பணியும் இவர்கள் ,
இவர்கள் வாழும் உலகம் !

இங்கு பிறப்பும் இறப்பும்
ஓர் நாள் சடங்கு ,
வறுமையே இவர்களது சாபம்,
வசதி எட்டாத கனி !

உழைக்க துணிந்தும் ,
மறுக்கும் சமுதாயம் ,
வேலைகள் கேட்டு வாசல் தேடினால் ,
ஏசல் தான் இவர்களுக்கு சன்மானம் !

சாலையோரம் தூங்கும் வேளையில் ,
சீண்டி பார்க்கும் சிலர் கைகள் ,
மீண்டு எழுந்து ஊரை கூட்டினால் ,
திருட்டு பட்டமும் இவர்களுக்கு உண்டு !

மூன்று வேலை உணவு ,
இதுவே இவர்கள் கனவு ,
ஏக்கம் கொண்ட இவர்களிடம் ,
இனியாவது இறக்கம் கொள்வோம் !

இருப்பதையெல்லாம் தனக்கென கொள்ளும்
மனித எண்ணங்கள் மாறும் வேலையே
வறுமை ஒழிந்து வளர்ச்சிப்பாதையில்
ஏழை குலமும் தழைக்க தொடங்கும் !

மக்கள் தொகை பெருகிபோச்சு
மனிதநேயம் குறைந்து போச்சு
இறக்கம் மனிதனிடம் அதிகமானால் ,
பிச்சைக்கார சமுதாயம் அறவே ஒழியும் !

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Apr-13, 8:04 pm)
பார்வை : 123

மேலே