இன்னும் சற்று நேரம்தான்

காய்ந்த நதியாய்
வெறிச்சோடிக் கிடக்கிறது
நகரத்தின் சாலை

அங்கே
அமைதியின்
ஓவியம் ஒன்று
அழகாய் வரையப்படுகிறது

நிரந்தரமாய் விரிக்கப்பட்ட
கரும்புகைத் திரை
தற்காலிகமாய்
விலக்கப்படுகிறது

மாசில்லாத காற்று
நடனமாடி வருவதை
இச்சமயம்
விளக்கப்படுகிறது

போக்குவரத்து காவலர்
நிற்கும் சந்திப்பில்
கோயில் பசுக்கள்
நிம்மதியாய் படுத்து
அசைபோட்டுக் கொண்டு
இருக்கின்றன.,

ஒரு காலத்தில்
இவ்விடமெல்லாம்
விளை நிலங்களாக
இருந்திருக்கலாம் என்று
அங்கலாய்த்தபடி

பகலில் தூங்கும் நகரை
பார்த்து நகைக்கின்றன
தொலைக் கோபுரங்களில்
அமர்ந்த பறவைகள்

சாலையில்
மொய்ப்பவர்கள்
வீடுகளில் தூங்குகிறார்கள்
ஓய்வின் துணையுடன்

அவசரத்திற்கான அவசியம்
எதிலும் இல்லை

108..ன் பயமுறுத்தல்
சுத்தமாய் இல்லை

எல்லாம் சற்று நேரம்தான்

மாலை ஆறு மணி வரைதான்
பந்த்!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (11-Apr-13, 12:10 pm)
பார்வை : 212

மேலே