அரசியல்
அரசியல் உலகத்தின் அச்சாணி,
ஒவ்வொரு நாட்டின் உயிர்த்துடிப்பு ,
ஆளும் கட்சி எதிர் கட்சி என ,
இரு குழுக்கள் !
பெரும்பாலும் நல்லவர்கள்,
இதனை ஒதுக்குவார் ,
தீயவர் இதனை தேடுவர் !
உலக தலைவர்களை உருவாக்கிய மைய புள்ளி ,
இதில் உத்தமர்களும் உண்டு ,
வித்தகர்களும் உண்டு,
கெட்டவர்களும் உண்டு !
படை பலமும் பண பலமும் தந்திரமும் தான் ,
இங்கு முதல் தகுதி ,
பொதுநல சேவையே அனுபவம்!
பதவியே லட்சியம் ,
வீரம் கொண்டவர்கள் தலைவராகலாம்,
மற்றவர்கள் எல்லாம் தொண்டர்கலாகலாம் !
வீதியில் இருந்தவர்கள் கோடிக்கும்,
கோடியில் புரண்டவர்கள் வீதிக்கும்,
வந்த வரலாறுகள் எத்தனையோ !
சின்னதை போட்டு பெரியதை
பிடிக்கும் விநோதமும் உண்டு ,
பள்ளிவாசமே இல்லாதவர்களும்
பதிவி வகிக்க தகுதியானர்வர்கள் !
பொதுநல நோக்கம் குறைவு ,
சுயநல நோக்கம் அதிகம் ,
சப்த்தமில்லாமல் திருடும் ,
உத்தமர் நடிப்பும் உண்டு !
ஏய்த்து பிழைத்தாலும்,
மிரட்டி பணித்தலும் ,
இங்கு இலக்கணம் ,
அடக்கு முறையும் அதிகாரமும் ,
இவர்களின் பலத்தை காட்டும் !
பொய்யானவர்களே உலவும்
அரசியல் உலகில் மெய்யானவர்களே
தேடுவதே கடினம் ,
விசுவாச நாய்களும் தந்திர நரிகளும்
உலவும் கூடம் !
நாட்டுக்கான தலைவர்கள்,
மண்ணுக்குள் போய்விட,
சில வீட்டுக்கான தலைவர்களே,
இன்று உலகத்து அரசியலில் வீற்றிருக்கிறார்கள் !