பெண்கள்

சில தருணங்களில் -
என் கண்களைக் காக்கும் இமை...

சில தருணங்களில் -
என் கண்களில் விழும் புழுதி..!


சில தருணங்களில் -
எனக்கு உணவளித்திடும் வயல்...

சில தருணங்களில் -
என்னை காய வைத்திடும் பாலைவனம்..!


சில தருணங்களில் -
எனக்கு ஒளி அளிக்கும் சூரியன்...

சில தருணங்களில் -
என்னை சுட்டு எரிக்கும் சூரியன்..!


சில தருணங்களில் -
நான் வாழ வழி வகுத்திடும் காற்று...

சில தருணங்களில் -
என்னை சாகவைக்க முயற்சித்திடும் புயல்..!

எழுதியவர் : மதன்... (11-Apr-13, 7:44 pm)
சேர்த்தது : Madhankumar R
Tanglish : pengal
பார்வை : 103

மேலே