வீடு திரும்ப காத்திருக்கிறேன்...
ஆதி அந்தங்கள்
புரியாமல் பிறந்து
சேர்ந்து பழகியது
சொந்தம் என்றேன
வாடி நின்றதும்
ஓடும் பந்தங்கள்
கோடி சேர்ந்ததும்
கூடி வந்திடும்
வேஷங்கள் தினம்
காட்சிகள் வேறு
சலிப்பாய் மனம்
கடலலையாய் திரும்பும்
நிதர்சனங்கள்
நிழலாய் ஆனதும்
நிழல்கள் மட்டுமே
நிஜமென்றானது
படைத்தவன் கடைக்கண்
பார்வை பட்டதும்
விடைபெற்றேன்
இப்பொழுது
வீடு திரும்ப காத்திருக்கிறேன் !