எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை?

பனிக்காற்று மெலிதாய்
நகர்ந்து என் மயிர் பீலியின்
வேரில் இளைப்பாரும் இனிய இரவில் -
குளிர்ந்த உடல் மெதுவாய் எழும்பி
அந்தரத்தில் மேகத்தோடு
மையம் கொண்டிருக்க -
நிலவையும் விண்மீனையும் கண்கள் முத்தமிட
உன் சிறு சிறு வார்த்தைகளை மிடறு மி டறாய்
விழுங்கி கொண்டிருக்கிறது.செவி ஆசையாய்.-
எப்பேர்பட்ட குரல் உன்னுடையது?
சில நேரம் சிலிர்க்கிறாய்... சில நேரம் தழு தழுக்கிறாய் ..
பல நேரம் குழைகிறாய், மிழற்றுகிறாய் ....
போதையெற்றும் உன் சமிஞ்சைகள்
கெஞ்சலும் கொஞ்சலுமாக கூசவைக்கிறாய் உயிரை .....
எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை?