உலகத்தைப் புரட்டிப் போட உன்னாலும் முடியுமே!

எழுச்சி கொண்டு எழுந்து வா என் தமிழா!
தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்தாவது-நீ
தலை நிமிர்ந்து வாழ்ந்திட வா,என் தமிழா!

உன் இனத்தை அழிக்க நினைக்கும் ஈனரை
உலகில் இல்லாது செய்திட இதுவே தருணம்
அணிதிரண்டு வா அலைகடலென என் தமிழா!
அடங்கிக் கிடந்தது போதும் ஆர்பரித்து வா!

இன்னும் நீ ஏமாளியாய் இருந்தது போதும்...
இன்று இருக்கும் சமுக வலைதளங்கள்
சமுதாய அவலங்களை வடிகட்டும் சல்லடைகள்
உன் உணர்வுகளை அடைக்கி வைக்காதே
சுயநல சிறையில் அடைத்து வைக்காதே!
சிந்தனைகளை எழுத்துகளாய் எழுதி வை!

நீ காணும் அநீதியை நீர்த்துப் போக விடாதே..
ஒரு சிறு கல் எடுத்து எறிவது போல்
ட்வீட்டரில் ஒரு கீச்சு கீச்சிவிடு
உன் ஒரு கீச்சு ஓராயிரம் கோடியாய்
உலகெங்கும் உடனே பறந்து போகுமே

அறியாமை முகமூடியை அறுத்தெறியும் முகநூல்
உன் முகநூல் பக்கத்தில் உண்மையை எழுதி வை
உலகம் உன்னை உற்று நோக்கும்...
உலகத்தைப் புரட்டிப் போட உன்னாலும் முடியுமே!
எழுச்சி கொண்டு எழுந்து வா என் தமிழா!
தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்தாவது-நீ
தலை நிமிர்ந்து வாழ்ந்திட வா,என் தமிழா!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Apr-13, 10:33 am)
பார்வை : 114

மேலே