விஜய (வெற்றி)தமிழ் புத்தாண்டே வருக
மண்ணில் தோன்றும் புதிய ஆண்டே வருக
எண்ணிய எல்லாம் நிறைவேற தருக
பண்ணிய பாவங்கள் தொலைக்க வருக
புண்ணிய தருமங்கள் பெருக வருக ...!
நூறாண்டு காலம் வாழ வாழ்த்த வருக
நூறாண்டு ஆயுளும் நிலைக்க வருக
நோயினொடியின்றி புத்துணர்வு தருக
நூறு சொந்தங்கள் வாழ்த்த வெற்றிதமிழே வருக ...!
துணிவு என்றும் துன்ப தீர்த்திட வருக
பணிவு என்றும் பண்பு பொங்க வருக
இனிய மொழியே இனிமை தருக
இன்பம் பொங்கும் இனிமை வாழ்வும் தருக