நான் எனும் நீ
இது வரை
நமக்குள் தசையால்
பிணைந்த
பிணைப்பென்று
ஒன்றும் இருந்ததில்லை
இன்னும் கூட
என்புகளாலோ,நரம்புகளாலோ
ஏன் கருப்பையில் கூட
இணைந்தவர்கள் இல்லை நாம்
ஆனால்
லௌகீக உறவையும்
தாண்டி ஏதோ ஒரு
ஆன்மீக பந்தம்
உன்னிடம் எனக்கும்
என்னிடம் உனக்கும்
மனசுகள் பேசும்
மர்ம மொழியை
இதழ்களால் வார்த்தையாக்கி
ஒப்பித்தோம்
உன்னிடம் நானும்
என்னிடம் நீயும்
பிரிவுக்கும் நமக்கும்
நிறைய பிரிவு
உண்டானது
இதுவரை நாம்
சண்டையே போட்டதில்லை
என யாரிடமும் - நான்
சாட்ட விரும்பவில்லை
காரணம்
நாம் இருவரும்
இன்னுமொருமுறை இ
ணைந்து கொள்ள எடுக்கும்
நடவடிக்கைகள்
அவை
உன் பற்றி நானும்
என் பற்றி நீயும்
மீண்டும் மீண்டும்
புரிந்து கொள்ள கிடைக்கும்
வாயிப்புக்கள்
அவை
உனக்கும் எனக்கும்
நெருக்கம் அதிகம் உடலளவில்
ஆனால்
மனதளவில்....!?
நானே நீ ......நீயே நான்.....!