பயந்தோம்,,,, வியந்தோம்,,,,(ஹுஜ்ஜா)
கதிரவன் கண்டு
---வியந்து போனான் - அதை
கடவுள் என்றெண்ணி
----நன்றி சொன்னான்.
பாம்பை கண்டு
---பயந்து போனான் - அது
தீண்டாமல் இருக்க
----தெய்வம் என்றான்.
மலைகள் கண்டு
---மலைத்துப் போனான் -அதில்
சிலைகள் வடித்து
----வணங்கி நின்றான்.
பயந்ததும் வியந்ததும்
---இறைவ னென்றான்
படைத்தவன் அவனை
---மறந்துவிட்டான்.
கண்டதும் காணாததும்
---கடவு ளென்றான்
அண்டத்தின் அரசனை
----ஒதுக்கிவிட்டான்.