கோழைகள் யார்?
தமது சொந்த வாழ்க்கையை, வாழ்க்கை வகுக்கும் வழியில் நகர்த்திச் செல்ல அஞ்சுபவர்கள் தான் கோழைகள். இதுவரை நாம் அறிந்த, தெரிந்த, அனுபவப்பட்ட அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அறியாத, தெரியாத, புரியாத ஒன்றுக்குள் செல்ல அஞ்சுபவர்கள் தான் கோழைகள்.
அதாவது வாழ்க்கையை வாழ அஞ்சுபவர்கள் கோழைகள். ஏனெனில், வாழ்க்கை யானது ஒரு பொழுதும் நாம் அறிந்த தெரிந்த அனுபவப்பட்ட விடயங்களையோ அல்லது ஒரு கையேட்டையோ அடிப்படையாக வைத்து நகர்ததப்படும் ஒன்றல்ல.
கணத்துக்குக் கணம் இதுவரை நாம் அறியாத, தெரியாத, புரியாத, உணராத ஒன்றுக்குள் எம்மை நகர்த்திச் செல்வதுதான் வாழ்க்கை.
எனவே .வாழ்க்கை எதைத் தந்தாலும் அதை முழுமையாக எதிர்கொண்டு வாழ்க்கையின் வழிப்படி வாழ்வேன். என அறுதியிட்டு வாழ்பவர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் கோழைகளே.