@@@விஜய தமிழ் புத்தாண்டு @@@

தமிழர் வாழ்வு தாண்டவம்ஆடும் நிலை மாறி
தன்மானம் குறையாமல் என் தமிழன் வாழ்வு வாழ
தண்டித்தது போதும் இவர்களை என்று
தன்னிலை மாற்றி இயற்க்கையண்ணை
தன் மனம்குளிர்ந்து மக்கள் மனம் குளிர செய்ய
தமிழர் நாங்கள் எங்கள் மனத்தால் மகிழ்ச்சியோடு

தமிழ் புத்தாண்டு இனிதாய் கொண்டாட
தமிழ் செழிக்கும் எட்டுத்திக்கும்
தமிழர் வாழ்வும் செழிக்கும் என்றென்றும்
தன்னபிக்கை நீங்காமல் தமிழன் சிறக்க
தன்னலமில்லா பொது வாழ்வு வாழ
தமிழ் புத்தாண்டே இனிதாய் வருக

தமிழர் வாழ்வு என்றும் சிறக்க
தமிழ் நந்தன ஆண்டு தந்த பாடத்தோடு விஜய
தமிழ் புத்தாண்டை இனிதாய் வரவேற்கிறோம்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

...கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : கவியாழினி (14-Apr-13, 12:17 pm)
பார்வை : 125

மேலே