நம்ம ஊரு நல்ல ஊரு
பட்டணம்தான் போகாத தம்பி
பாடுபட வேண்டாம் தம்பி
நம் படித்த படிப்பு
பக்குவமாய் பதவிசாய்
வேலை செய்யலாம் தம்பி ....!
நம்ம நாட்டுல நம்ம வீட்டுல
திறந்து காத்துகிடக்குது வழியெல்லாம்
தாய் நாடு தாய்பால் ஊற்றும்
தாய்ப்பற்று வாழ்வைக் கொடுக்கும் தம்பி ...!
வெளி நாட்டில் யாரிடமும் கையேந்தாதே
உனக்குப் பிடிக்கதாதா செய்யாதே
நன்செய்யும் புன்செய்யும்
காத்துக் கிடக்குது உனக்காக
நமக்கு நாமே வாழலாம் தம்பி ...!
பொறியியல் படித்தவன்
பொறி விக்கிறான்
கம்பியுட்டர் படித்தவன்
கம்பளம் விக்கிறான் தம்பி ...!
மளிகை பொருள் விக்கிறவன்
மாளிகை வாங்குறான்
பீ எச்சி படித்தவன்
பிசுனஸ் பண்றான் தம்பி ...!
எம் மஸி படித்தவன்
மெஸ்ல வேலை செய்யுறான்
எம் பீயெ படித்தவன்
எம் .பீ ..ஆகிறான் தம்பி ...!
பீ ஏ படித்தவன்
மந்திரிக்கு
பீ ஏ ஆகிறான்
நம்ம ஊரு நல்ல ஊரு
எல்லாம் விளையுற ஊரு
இது போதும் தம்பி நாம முன்னேற ....!