நாட்டுப்புற காதல் பாட்டு-அவன்

தனனே தானானே
தனனானே தானானே ...........

பூவிதழ் உதட்டாலே
=====பூகம்பம் தந்துபுட்டா

பட்டாம்பூச்சி பாசத்துல
====பயில்வானா ஆக்கிபுட்டா

கூந்தல் முழுதும் நல்ல
====பூஞ்சோல வாசமடா

கண்ண சிமிட்டும் போதே -ஏன்
====இதய துடிப்பு எகிறுமடா

என்னை மடிச்சு வச்சா
====முந்தானை மடிப்பிலடா

உசுற தொடச்சு வச்சு
====மறு புறப்பு தந்துபுட்டா

நிலவ பார்த்தாலே என
====முறைச்சு பாப்பாடா

காது லோலாக்கில்-ஏன்
====காதல் கதைய சொன்னாடா

சித்திரை மாசத்திலும்
====கருமேகம் சூழ்ந்ததடா

கொஞ்சும் அவள் சிரிப்பில்
====மின்னல் வெட்டுதடா

அவ பேசும் தமிழ்மொழியில்
====புது கவித ஜனிக்குதடா

அவள ரசிக்கயிலே
யமனே வந்தாலும்
==ம்ம் ம்ம் யமனே வந்தாலும்

"இந்தாப்பா போயிட்டு அப்புறம் வா "

====சொல்லும் துணிச்சல் வந்ததடா ............

ஏதோ ஒரு குழந்தைக்கு
அவளிட்ட முத்தத்துல -ஏன்
ரத்தம் சூடாச்சு --------
=====உயிர் மூச்சு பலமாச்சு ..........

ஏன் முக்காலபங்கு ஆயுசையே
====குத்தகைக்கு எடுத்துபுட்டா

அவளோட உசிரில் மெல்ல
====என் உசுர கலந்துபுட்டா

படச்ச பிரம்மன்கிட்ட
====ஏன் விதிய வாங்கிகிட்டா

காதல் வந்தாச்சு -அந்த
====மேல் வானம் வசமாச்சு .........

தனனே தானானே
தனனானே தானானே ...........

**********************************************************************
குறிப்பு : எனக்கும் காதல் கவித எழுத வரும் ஆனா வராது .........

நம்ம தள காதல் தலைகள் யாராச்சும் வந்து நல்லா இருக்காணு பாத்து சொல்லுங்கப்பா .............இத எழுதுறதுகுள்ள நான் பட்ட பாடு ஷ் ஷ்ஷ்ஷ்ப்பா ...........ஹா ஹா ஹா

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (15-Apr-13, 11:10 am)
பார்வை : 2235

மேலே