முதிர்ந்த கதை
பனி வெண் நூல் எடுத்து
என் கை படவே......
அழகிய வேலைப்பாடுடன்
திறம்பட நெய்து உருவாக்கிய
சமுக்காளம் தனை விரித்து
கடல் அலை ஓசை என
பலநூறு ஆசைகளை மனதில் தேக்கி
மணாளனே உன் வருகைக்காக
தவம் இருக்கிறேன்!!
கரை மோதி மோதி
திரும்பும் அலையென
நேரம் ஓடி ஓடி
காலம் கடந்தது தான் மிச்சம்!
புதுமையாய் பதுமையாய்
சமுக்காளம் மட்டுமல்ல நானும்.......
உன் வரவை எதிர்நோக்கி
முதிர்ந்த கதை சொச்சம்!!!!!!!
--- நாகினி