மழை வேண்டுதல் விடுத்ததோ..!!
' தனி மனிதன் சேமிக்கும்
ஒவ்வொரு துளி நீரும்
பெருங் கடல் அளவு
மக்கள் சமுத்திரம் சேரும் ' என
'ச்ச்சோவென '....உரத்த குரலில்
கதறி அழுது அறிவுரை கூறியும்
காதில் வாங்கா மனிதர் நிலை கண்டு
அழுத கதறல் அடங்கியும்
ஆற்ற முடியாமல் .....
துளித் துளியாய் கண்ணீர் விட்டு
' மழை நீர் சேமிப்புத் திட்டம் ' குறித்து
மழை வேண்டுதல் விடுத்ததோ..!!
--- நாகினி